பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகள் இன்று செயல்படும்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:ரேஷன் கடைகளுக்கு, இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், மதியம் வரை அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.தமிழக ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை நாள். அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்று கிழமைகளில் கடை செயல்படும்.அதன்படி, இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை:ரேஷன் கடைகளுக்கு, இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், மதியம் வரை அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை நாள். அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்று கிழமைகளில் கடை செயல்படும்.அதன்படி, இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை. இருப்பினும், அவை வழக்கம் போல் செயல்படும்.

அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான, தலா, 2,000 ரூபாயும்; மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும், 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.இதனால், இன்று முதல், 14ம் தேதி வரை ரேஷன் கடைகளில் மதியம், 12:30 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும். பிற்பகலில், நிவாரண பொருட்கள் வழங்க, கடைகளுக்கு எந்த தேதி; நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, இன்று முதல், 14ம் தேதி வரை, கார்டுதாரரின் வீடுகளில் வழங்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X