பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணியாளர்கள் விபரத்தை 14க்குள் அனுப்ப உத்தரவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:ஊக்கத்தொகை வழங்குவதற்காக, கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரின் விபரங்களை 14ம் தேதிக்குள் அனுப்பும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை:கொரோனா தொடர்புடைய பணியில் ஈடுபட்டு வரும், கால முறை ஊதியத்துடன் கூடிய அரசு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ்

சென்னை:ஊக்கத்தொகை வழங்குவதற்காக, கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரின் விபரங்களை 14ம் தேதிக்குள் அனுப்பும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை:கொரோனா தொடர்புடைய பணியில் ஈடுபட்டு வரும், கால முறை ஊதியத்துடன் கூடிய அரசு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றி வருவோருக்கும், ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி ஊக்கத்தொகை பெற, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களின் விபரங்களை அனுப்ப வேண்டும்.

கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்கள்; கொரோனா கவனிப்பு மையங்கள்; காய்ச்சல் முகாம்கள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில், ஏப்ரலில் இருந்து இம்மாதம் வரை ஈடுபட்டுள்ள பணியாளர்கள் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள் விபரங்களை, உரிய படிவத்தில் ஆணையர் அலுவலகத்திற்கு தபால் அல்லது 'இ - மெயில்' வழியே, வரும் 14ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.இவ்வாறு கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X