பொது செய்தி

தமிழ்நாடு

கொள்கை விளக்க குறிப்பு அனைத்து துறையும் தீவிரம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:கவர்னர் உரை மற்றும் கொள்கை விளக்க குறிப்பு புத்தகம் தயார் செய்ய வேண்டி உள்ளதால், பணியாளர்களை பணிக்கு வரும்படி, அனைத்து துறை தலைவர்களும் உத்தரவிட்டுள்ளனர்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும், 21ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 10:00 மணிக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அதற்காக உரை தயார் செய்யும் பணி துவக்கப்பட்டு உள்ளது. எனவே, ஒவ்வொரு துறையிலும்

சென்னை:கவர்னர் உரை மற்றும் கொள்கை விளக்க குறிப்பு புத்தகம் தயார் செய்ய வேண்டி உள்ளதால், பணியாளர்களை பணிக்கு வரும்படி, அனைத்து துறை தலைவர்களும் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும், 21ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 10:00 மணிக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அதற்காக உரை தயார் செய்யும் பணி துவக்கப்பட்டு உள்ளது. எனவே, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த விபரங்களை அரசு கேட்டுள்ளது.

மேலும், இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. அப்போது, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும்.அதையொட்டி, ஒவ்வொரு துறையிலும், கொள்கை விளக்க குறிப்பு தயார் செய்யும் பணி துவக்கப்பட்டு உள்ளது.

எனவே அனைத்து துறைகளிலும், பெரும்பாலான பணியாளர்களை பணிக்கு வரும்படி, துறை தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழக அரசு, 30 சதவீதம் பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வர உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பணியாளர்களும் பணிக்கு வரும்படி, துறை தலைவர்கள் உத்தரவிட்டிருப்பதும், அலுவலகம் வர போக்குவரத்து வசதி இல்லாததும், ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X