அரசியல் செய்தி

தமிழ்நாடு

'‛டிவி' விவாதம் பா.ஜ., புறக்கணிப்பு?

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், நடந்தது. தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச் செயலர் கேசவவினாயகம், துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா.எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், நடிகை குஷ்பு மற்றும் 'டிவி'

சென்னை:தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், நடந்தது.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச் செயலர் கேசவவினாயகம், துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா.எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், நடிகை குஷ்பு மற்றும் 'டிவி' விவாதங்களில் பங்கேற்பவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:'டிவி' சேனல்களில் நடக்கும் விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ., சார்பில்பங்கேற்பவர்களுக்கு, தங்கள் கருத்தை தெரிவிக்க போதிய நேரம் கொடுப்பதில்லை.அவர்களின் கருத்துகளை தெரிவிக்கும் போது, எதிர்தரப்பினர் பேச விடாமல், தங்களின் கருத்துகளை கூறுவது போல், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கின்றனர்.

அதை ஒழுங்குப்படுத்த வேண்டிய நெறியாளர்களும், நடுநிலையாளர்களாக இருப்பதில்லை. விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.,வினர், ஒருதலைபட்சமாகவும், பாரபட்சமாகவும் நடத்தப்படுகின்றனர்.எனவே தற்காலிகமாக, 'டிவி' விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ., சார்பில் யாரும் பங்கேற்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X