பொது செய்தி

இந்தியா

10 ஆண்டாக ஒரே அறையில் மறைந்திருந்த பெண்; காதலனுடன் மீட்பு

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
பாலக்காடு : பத்து ஆண்டுகளாக வெளியுலகிற்குத் தெரியாமல் ஒரே அறையில் ஒளிந்திருந்த பெண்ணை, காதலனுடன் போலீசார் மீட்டனர்.கேரளாவில், அயிரூர் அருகே, கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த, இளம் பெண், 2010ல் திடீரென மாயமானார். 10 ஆண்டுகளுக்குப் பின், அந்த பெண்ணை, காதலனுடன் போலீசார் மீட்டனர்.இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: காணாமல் போன பெண், தன் வீட்டின் அருகில் உள்ள காதலன்
Kerala, 10 years,lover, Rahman and Sajitha

பாலக்காடு : பத்து ஆண்டுகளாக வெளியுலகிற்குத் தெரியாமல் ஒரே அறையில் ஒளிந்திருந்த பெண்ணை, காதலனுடன் போலீசார் மீட்டனர்.

கேரளாவில், அயிரூர் அருகே, கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த, இளம் பெண், 2010ல் திடீரென மாயமானார். 10 ஆண்டுகளுக்குப் பின், அந்த பெண்ணை, காதலனுடன் போலீசார் மீட்டனர்.

இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: காணாமல் போன பெண், தன் வீட்டின் அருகில் உள்ள காதலன் வீட்டில், ஒரே அறையில், 10 ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த அறையில் கழிப்பறை கூட இல்லை. அதனால் இரவில் மட்டும் ஜன்னலை திறந்து, அந்த பெண் வெளியே வருவாராம். காதலன் வெளியே செல்லும் போது, அறையை பூட்டி விட்டு செல்வாராம்.


latest tamil news


இது குறித்த தகவல் கிடைத்ததும், அவர்களை பிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தினோம். அப்போது, காதலனுடன் தான் வாழ்வேன் என, அந்த பெண் கூறியதால், இருவரையும் நீதிமன்றம் விடுவித்து விட்டது. பெண்ணின் குடும்பத்தினரும் இதை எதிர்க்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

ஒரு வார ஊரடங்கில், வீட்டில் இருக்க முடியாமல் வெளியே செல்ல துடிப்போர் மத்தியில், ஒரு பெண், 10 ஆண்டுகளாக ஒரே அறையில் இருந்தது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
11-ஜூன்-202111:11:44 IST Report Abuse
 Ganapathy Subramanian மலையாள மனோரமாவில் அவர்கள் பெயர் ரஹ்மான் மற்றும் சஜிதா என்று வந்துள்ளது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஜூன்-202110:20:25 IST Report Abuse
Natarajan Ramanathan அதே வீட்டில் அந்த காதலனின் மனநலம் பாதிப்படைந்த சகோதரியும் அவர்களது பெற்றோரும் இருந்துள்ளார்கள். ஆனாலும் யாருக்குமே தெரியாமல் ஒரு பெண் பத்தாண்டுகள் ஒரே அறையில் இருந்தது எல்லாம் நம்பமுடியாத விஷயம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஜூன்-202110:16:34 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு பெண்ணால் யாருடனும் பேசாமல் மட்டும் இருக்கவே முடியாது. எனவே இந்த இந்து பெண் அவரது முசுலீம் காதலனால் சிறை வைக்கப்பட்டு அதனால்கூட அவரது மனநலம் பாதிப்பு அடைந்திருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X