கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு வசூலிக்காத கலெக்டர் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்: ஐகோர்ட்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:'இழப்பீட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத கலெக்டர், தாசில்தாருக்கு எதிராக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது மகள் சங்கீதா விபத்தில் இறந்தார். உரிய இழப்பீடு வழங்க, தொழிலாளர் நல கமிஷனர்உத்தரவிட்டார்.இழப்பீடு வழங்காததால், தொகையை

சென்னை:'இழப்பீட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத கலெக்டர், தாசில்தாருக்கு எதிராக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது மகள் சங்கீதா விபத்தில் இறந்தார். உரிய இழப்பீடு வழங்க, தொழிலாளர் நல கமிஷனர்உத்தரவிட்டார்.இழப்பீடு வழங்காததால், தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வசூலிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


எந்த தடையும் இல்லை

இம்மனு, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தமிழ்வாணன், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏழுமலை ஆஜராயினர்.மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது; அதேநேரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர எந்த தடையும் இல்லை என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:கடந்த, 2006ல் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இழப்பீட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்காததற்கு ஆதாரம் இருந்தால், அப்போது இருந்த கிருஷ்ணகிரி கலெக்டர், அதன்பின் வந்த கலெக்டர், தாசில்தாருக்கு எதிராக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு, குற்றச்சாட்டு, 'மெமோ' வழங்க வேண்டும்.

அதிகாரிகளின் செயலற்ற தன்மை, கடமை தவறியதற்கு சமமானது. உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். துறை நடவடிக்கையும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் வெவ்வேறானது.


உத்தரவு

தொழிலாளர் இழப்பீடு சட்டம், பணிக்கொடை சட்டத்தின் கீழ், தொகையை வசூலிக்கும்படி அதிகாரிகளிடம் இருந்து தகவல் வந்தால், கலெக்டர் மற்றும் தாசில்தார், அதை கிடப்பில் போடக்கூடாது என்ற சுற்றறிக்கையை அரசு பிறப்பிக்க வேண்டும். அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல் என்பது, நிறைவேற்றப்பட வேண்டிய உத்தரவு; அதை வெறும் தகவலாக கருதக் கூடாது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X