கோர்ட் செய்தி

தமிழ்நாடு

14ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் காணொலி வாயிலாக வழக்கு விசாரணை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:வரும், 14ம் தேதி முதல், சென்னை உயர் நீதிமன்றத்தில், அனைத்து நீதிபதிகளும், காணொலி வாயிலாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர். மறு உத்தரவு வரும் வரை, வழக்கறிஞர்களும் காணொலி வாயிலாக தான் ஆஜராக வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே மாதம் கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 1 முதல், நீதிமன்றங்களில் வழக்கம் போல, வழக்கு விசாரணை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.இதற்கிடையில்,

சென்னை:வரும், 14ம் தேதி முதல், சென்னை உயர் நீதிமன்றத்தில், அனைத்து நீதிபதிகளும், காணொலி வாயிலாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர். மறு உத்தரவு வரும் வரை, வழக்கறிஞர்களும் காணொலி வாயிலாக தான் ஆஜராக வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மே மாதம் கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 1 முதல், நீதிமன்றங்களில் வழக்கம் போல, வழக்கு விசாரணை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகரித்ததாலும், திருநெல்வேலி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட், கொரோனா பாதிப்பால் பலியானதாலும், கீழமை நீதிமன்றங்களில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

வைரஸ் தொற்று பரவல் கருதி, உயர் நீதிமன்ற பணிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜூன், 1ம் தேதி முதல், மிக அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில், நீதிபதிகள் பணியாற்றுகின்றனர்.வரும், 14ம் தேதி முதல், சென்னை உயர் நீதிமன்றத்தில், அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர். அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து, அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இவர்கள் காணொலி வாயிலாக, வழக்குகளை விசாரிப்பர். வழக்கறிஞர்கள், வழக்காடிகள், காணொலி வாயிலாகவே ஆஜராக வேண்டும். அரசு வழக்கறிஞர்களை பொறுத்தவரை, தேவைப்பட்டால், அவர்கள் நேரில் ஆஜராக நீதிபதிகள் அனுமதி வழங்குவர்.உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வர, வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தில், 50 சதவீத பணியாளர்கள்,கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இயங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில், இவர்கள் பணியாற்றுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X