தமிழ்நாடு

சமூக இடைவெளியின்றி அலட்சியம்; கொரோனா பரவும் அபாயம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இ.சேவை மையம், பத்திரபதிவுத்துறை அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுஊரடங்கால் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வருகிறது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.இதனை மீறுபவர்கள் மீது போலீசார், நகராட்சி

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இ.சேவை மையம், பத்திரபதிவுத்துறை அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுஊரடங்கால் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வருகிறது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.இதனை மீறுபவர்கள் மீது போலீசார், நகராட்சி சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

இருப்பினும் அதனை அலட்சியப்படுத்தும் வகையில் தற்போது ஊரடங்கு தளர்வை பயன்படுத்தி ராமநாதபுரம்தாலுகா இ.சேவை மையம், பத்திரபதிவுத்துறை அலுவலகம்மற்றும் சில கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிகின்றனர்.தொற்று பரவ வாய்ப்புஉள்ளதால் சுகாதாரத்துறையினர் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X