பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை நகராட்சிக்கு ரூ.1 கோடி வரி பாக்கி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தாமல் ரூ.1 கோடி பாக்கி வைத்துள்ளது.இந்த மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரித்தல், குழாய் பழுதுநீக்க பணிகள் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நகராட்சிக்கு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தாமல் ரூ.1 கோடி பாக்கி வைத்துள்ளது.

இந்த மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரித்தல், குழாய் பழுதுநீக்க பணிகள் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நகராட்சிக்கு பாதாளசாக்கடை பராமரிப்பு வரி செலுத்த வேண்டும்.இக்கட்டணத்தை செலுத்த வலியுறுத்தி நகராட்சி பலமுறை கடிதம் அனுப்பியது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. இதனால் பத்து ஆண்டு பாதாள சாக்கடை பராமரிப்பு வரி பாக்கியாக மொத்தம் ரூ.1 கோடி வரை உள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன்கூறுகையில், 'மருத்துவமனை செலுத்த வேண்டிய பாதாளசாக்கடை வரி பாக்கி குறித்து அவ்வப்போது நோட்டீஸ் அனுப்புகிறோம். தற்போது கொரோனா காலம் என்பதால் வரிவசூல் குறைந்துஉள்ளது. பொதுமக்களை கட்டாயப்படுத்தவில்லை. அரசு மருத்துவமனை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X