பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு இன்றி பாழாகும் ராமநாதபுரம் அம்மா பூங்கா

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் அருகே டி பிளாக்கில் உள்ள அம்மா பூங்கா பல மாதங்களாக பராமரிக்கப்படாததால் புதர் மண்டி கிடக்கிறது.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ரூ. பல லட்சம் செலவில் குழந்தைகள் விளையாடும் வகையில் ராட்டினம், ஊஞ்சல்கள், விலங்குகளின் பொம்மைகள் உள்ளன. இதுபோக தனியாக உடற்பயிற்சிகூடம் உள்ளது. ஏராளமானவர்கள் தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி

பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் அருகே டி பிளாக்கில் உள்ள அம்மா பூங்கா பல மாதங்களாக பராமரிக்கப்படாததால் புதர் மண்டி கிடக்கிறது.

6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ரூ. பல லட்சம் செலவில் குழந்தைகள் விளையாடும் வகையில் ராட்டினம், ஊஞ்சல்கள், விலங்குகளின் பொம்மைகள் உள்ளன. இதுபோக தனியாக உடற்பயிற்சிகூடம் உள்ளது. ஏராளமானவர்கள் தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற் கொள்ளவும், பொழுதுபோக்கவும் வந்துசெல்வர்.கொரோனா பரவலால் தற்போது பூங்கா பூட்டப்பட்டுள்ளது.

பல மாதங்களாக பூங்கா வளாகம் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்துஉள்ளன. முட்செடிகள், புற்கள் வளர்ந்து பூங்கா பாழாகி வருகிறது.பூங்காவை தொடர்ந்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X