இடிந்து விழும் வீடுகள்: நரிக்குறவர்கள் அச்சம்| Dinamalar

இடிந்து விழும் வீடுகள்: நரிக்குறவர்கள் அச்சம்

Added : ஜூன் 10, 2021
Share
திருவாடானை : நரிக்குறவர்களுக்கானதொகுப்பு வீடுகள் இடிந்ததால் புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தியுள்ளனர்.திருவாடானை சமத்துவபுரம் அருகே 36 நரிக்குறவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கபட்டது. தரமின்றி கட்டப்பட்டதால் 10 ஆண்டுகளுக்கு முன்பே விரிசல்கள்விழுந்தன. தற்போது சில வீடுகள் இடிந்தும், மற்ற வீடுகளில் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும்

திருவாடானை : நரிக்குறவர்களுக்கானதொகுப்பு வீடுகள் இடிந்ததால் புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தியுள்ளனர்.

திருவாடானை சமத்துவபுரம் அருகே 36 நரிக்குறவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கபட்டது. தரமின்றி கட்டப்பட்டதால் 10 ஆண்டுகளுக்கு முன்பே விரிசல்கள்விழுந்தன. தற்போது சில வீடுகள் இடிந்தும், மற்ற வீடுகளில் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் அபாயத்திலும் உள்ளன.

இதுகுறித்து செல்வம் கூறுகையில், ''வீடுகளுக்குள் துாங்க முடியாமல் வாசலில் படுத்து துாங்குகிறோம். ஆரம்பத்தில் 36 குடும்பத்தினர் வந்தோம். தற்போது எங்கள் குடும்பங்களின் எண்ணிக்கை 75க்கு மேல் அதிகரித்துவிட்டது. தேர்தலின் போது ஓட்டு கேட்க வருபவர்கள், எங்களுக்கு வீடு கட்டி கொடுப்பதாக கூறினர். அதன்பின் கண்டுக்கொள்வதில்லை. கலெக்டரிடம் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்துள்ளோம். எங்களின் நிலைமையை உணர்ந்து புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X