பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய உணவு கழக ஒப்பந்த கூலித்தொழிலாளர்கள் பாதிப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்திலுள்ள இந்திய உணவு கழகத்தில் இரண்டு அரிசி குடோன்களின் ஒப்பந்த கூலித்தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுஉள்ளனர்.இங்கு ஒப்பந்த அடிப்படையில் 62 தொழிலாளர்கள் மூடைகளை ஏற்றி, இறக்கும் பணியில் உள்ளனர். தற்போது ராமநாதபுரம் குடோனுக்கு வரவேண்டிய அரிசியை சிவகங்கை மாவட்ட குடோனுக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு செல்வதால்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்திலுள்ள இந்திய உணவு கழகத்தில் இரண்டு அரிசி குடோன்களின் ஒப்பந்த கூலித்தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

இங்கு ஒப்பந்த அடிப்படையில் 62 தொழிலாளர்கள் மூடைகளை ஏற்றி, இறக்கும் பணியில் உள்ளனர். தற்போது ராமநாதபுரம் குடோனுக்கு வரவேண்டிய அரிசியை சிவகங்கை மாவட்ட குடோனுக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு செல்வதால் ஒப்பந்த தொழிலாளர்கள்வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் இந்திய உணவு கழக ஒப்பந்த தொழிலாளர் சங்கம் செயலாளர் ராமச்சந்திரன் கூறுகையில், 'ராமநாதபுரம் குடோனில் 20 ஆயிரம் டன் வரை அரிசி உள்ளது. இதனை பயன்படுத்தாமல் சிவகங்கை குடோனிலிருந்து கொண்டு வருகின்றனர். தற்போது பிரதமர் அறிவித்துள்ள கூடுதல் அரிசியும் அங்கிருந்து தான் வருகிறது.

இதனால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மூடை ஏற்றினால் ரூ.3 கிடைக்கும். ஊரடங்கு நேரத்தில் அதுவுமின்றி பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகையால் எங்களுக்கு பணி வழங்க அதிகாரிகள்முன்வர வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துஉள்ளோம்'' என்றார்.------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X