அமெரிக்காவிலிருந்து விரைவில் வருகிறது கொரோனா தடுப்பூசி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:'பயன்படுத்தாமல் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்' என, அமெரிக்க வெளியுறவு துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. மருந்து பொருட்களை அனுப்பி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவியுள்ளன.இந்நிலையில், 'பயன்படுத்தாமல் கையிருப்பில் உள்ள எட்டு

வாஷிங்டன்:'பயன்படுத்தாமல் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்' என, அமெரிக்க வெளியுறவு துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. மருந்து பொருட்களை அனுப்பி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவியுள்ளன.இந்நிலையில், 'பயன்படுத்தாமல் கையிருப்பில் உள்ள எட்டு கோடி டோஸ் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பி உதவ வேண்டும்' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, அந்நாட்டு எம்.பி.,க்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

'முதல் கட்டமாக, 2.5 கோடி தடுப்பூசிகள், ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, பைடன் அறிவித்தார். அதில், 1.9 கோடி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:மொத்தம் எட்டு கோடி டோஸ் தடுப்பூசிகள், உலக நாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 1.9 கோடி தடுப்பூசிகள், 'கோவாக்ஸ்' எனப்படும், ஐ.நா., அங்கீகரித்துள்ள, தடுப்பூசி ஒத்துழைப்பு அமைப்பு வாயிலாக வழங்கப்படும். கோவாக்ஸ் மூலம் வழங்கப்படும் தடுப்பூசிகளில், 80 லட்சம் டோஸ், இந்தியாவுக்கு கிடைக்கும். மிக விரைவில், இந்த தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X