பொது செய்தி

இந்தியா

உணவு பொருள் விற்பனையில் புதிய விதிமுறை அமலாகிறது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி:உணவுப் பொருள் விற்பனை ரசீதில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் வழங்கியுள்ள உரிம எண்ணை அச்சிடுவதை கட்டாயமாக்கும் விதிமுறை, விரைவில் அமலுக்கு வர உள்ளது.மக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 14 இலக்க உரிம எண் வழங்குகிறது. இந்த எண், உணவுப்

புதுடில்லி:உணவுப் பொருள் விற்பனை ரசீதில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் வழங்கியுள்ள உரிம எண்ணை அச்சிடுவதை கட்டாயமாக்கும் விதிமுறை, விரைவில் அமலுக்கு வர உள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 14 இலக்க உரிம எண் வழங்குகிறது. இந்த எண், உணவுப் பொருட்கள் அடங்கிய பாக்கெட், பாட்டில், அட்டைப் பெட்டி போன்றவற்றின் வெளிப்புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

எனினும் பல உணவுப் பொருட்கள், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் இன்றி விற்பனை செய்யப் படுகின்றன. இதனால் தரக் குறைவான உணவுப் பொருட்கள் குறித்து நுகர்வோர் புகார் செய்ய முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி பல நிறுவனங்கள், அவற்றின் உணவுப் பொருட்களில், கண்ணுக்குத் தெரியாத வகையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., முத்திரையை அச்சிடுகின்றன.

இத்தகைய சூழல் காரணமாக, நுகர்வோரின் புகார்களுக்கு தீர்வு காண்பதும் கடினமாக உள்ளது. எனவே, உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் உள்ளோர், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிம எண்ணை, விற்பனை ரசீதில் அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:தற்போது அனைத்து வகை உணவுப் பொருட்களின் அட்டையிலும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிம எண் அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், உணவகங்கள், இனிப்பு கடைகள், உணவு சப்ளை உள்ளிட்ட வர்த்தகங்களில், உணவின் தரம் குறித்து புகார் செய்வது நுகர்வோர்களுக்கு சிரமமாக உள்ளது. அதனால் அக்.,1 முதல் உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வழங்கும் ரசீதில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிம எண்ணை அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக உணவுப் பொருளின் சப்ளை விபரங்களை சுலபமாக அறியலாம். தரக் குறைவான உணவுப் பொருட்கள் குறித்த புகாரில், உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X