பொது செய்தி

தமிழ்நாடு

அதிக விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ''அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்'' என வேளாண் இணை இயக்குனர் டாம் பி.சைலஸ் எச்சரித்துள்ளார்.அவர் கூறியிருப்பது:மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு போதுமான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில்

ராமநாதபுரம் : ''அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்'' என வேளாண் இணை இயக்குனர் டாம் பி.சைலஸ் எச்சரித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது:மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு போதுமான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் யூரியா 3422 டன், டி.ஏ.பி 660 டன், பொட்டாஷ் 338, காம்ப்ளக்ஸ் 1342, சூப்பர் பாஸ்பேட் 81 டன் இருப்பில் உள்ளது. டி.ஏ.பி., உட்பட பிற உரங்களுக்கு மே 20 முதல் அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்க கூடாது.

அரசு உத்தரவின்படி அனைத்து நிறுவனங்களில் யூரியா மூடை ரூ.266.50, டி.ஏ.பி.,-1200, பொட்டாஷ்-1000, பொட்டாஷ் ஆர்.சி.எப்- 875, காம்ப்ளக்ஸ் எம்.சி.எப்.எல்-1090, பாக்ட் -1125, இப்கோ- 975, ஐபிஎல், சிஐஎல்-1050, கிரிப்கோ-1000, இப்கோ-1025, சூப்பர் பாஸ்பேட்-390, 425, 420 ஆகிய விலைகளில் விற்கப்பட வேண்டும். உர விலைப்பட்டியல், இருப்பு விவரத்தை விவசாயிகளுக்கு தெரியும்படி எழுதி வைக்க வேண்டும்.

அதிக விலைக்கு விற்றாலோ, விவசாயிகளிடம் இருந்து புகார் வந்தாலோ விற்பனையாளர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடை உரிமம் ரத்து செய்யப்படும்.மேலும் ஒரே விவசாயிக்கு அதிக உரம் விற்றாலும் நடவடிக்கை உண்டு.

விவசாயிகள் புகார்களை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலோ ராமநாதபுரம்-94861 76090, திருப்புல்லாணி- 78458 47696, உச்சிப்புளி 97902 57271, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும்திருவாடானை- 97881 68576, சத்திரக்குடி- 93458 97745, நயினார்கோவில்-94430 90564, பரமக்குடி- 96260 77490, கமுதி- 88701 67153, கடலாடி- 80564 72768, முதுகுளத்துார்-93452 17274 ஆகியோருக்கு தெரிவிக்கலாம். அல்லது உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு- 94430 90564, வேளாண் அலுவலர் தரக்கட்டுப்பாடு- 88387 97698 ஆகிய அலைபேசிகளில் தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X