தமிழ்நாடு

குடிநீர் வாகனத்தை தேடும் மக்கள்; பரமக்குடியில் 10 நாட்களாக அவதி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பரமக்குடி : காவிரி கூட்டு குடிநீர்திட்ட பராமரிப்பு பணியால்பரமக்குடி நகராட்சியில் குடிநீர் வாகனத்தை பொதுமக்கள் தேடி அலைந்து விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். கிராம மக்களுக்கு அந்த வசதியும் கிடைக்காததால் அவதிப்பட்டு வருகிறார்கள்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. இதையடுத்து பரமக்குடி

பரமக்குடி : காவிரி கூட்டு குடிநீர்திட்ட பராமரிப்பு பணியால்பரமக்குடி நகராட்சியில் குடிநீர் வாகனத்தை பொதுமக்கள் தேடி அலைந்து விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். கிராம மக்களுக்கு அந்த வசதியும் கிடைக்காததால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. இதையடுத்து பரமக்குடி நகராட்சியில் வைகை ஆற்றில் செயல்பட்டு வந்த குடிநீர் திட்ட கிணறு மற்றும் ஆழ்குழாய்கள் பராமரிக்கப்படாமல் விடப்பட்டது.இதேபோல் கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும்வகையில் கண்மாய் மற்றும் ஊரணி கரைகளில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் பலவும் செயல்இழந்துள்ளன. இதையும்அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நயினார்கோவில், போகலுார், பரமக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 10 நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் திருப்புத்துார் பகுதியில் நடப்பதால் குடிநீர் சப்ளை இல்லை. பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சாதாரண வண்டி நீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

நகராட்சி பகுதி மக்கள் குடிநீர் வாகனத்தை தேடி அலைந்து காசு கொடுத்து தண்ணீரை பெற்றாலும், கிராம மக்களுக்கு அந்த வசதியும் கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற நிலையால் மக்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே மக்களின் வாழ்வாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள்குடிநீர் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X