குலாம் நபிக்கு ராஜ்யசபா 'சீட்'

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கும்படி, தி.மு.க.,விடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதில், குலாம் நபி ஆசாதை தேர்வு செய்ய, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமது ஜான், சில மாதங்களுக்கு முன் இறந்தார். அந்த கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்களாக இருந்த முனுசாமி,

தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கும்படி, தி.மு.க.,விடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதில், குலாம் நபி ஆசாதை தேர்வு செய்ய, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமது ஜான், சில மாதங்களுக்கு முன் இறந்தார். அந்த கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்களாக இருந்த முனுசாமி, வைத்திலிங்கம், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,க்களாகி விட்டனர். இதனால் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கும் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. தமிழக சட்டசபையில், தி.மு.க.,வுக்கு உள்ள பலத்தால், மூன்று இடங்களையும் அக்கட்சியால் கைப்பற்ற முடியும். இந்நிலையில் இந்த மூன்று இடங்களில், தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கும்படி, தி.மு.க.,விடம், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீரிலிருந்து, 2015ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் பிப்ரவரியில் முடிந்தது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின், அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வில்லை. இதனால் தமிழகத்திலிருந்து குலாம் நபி ஆசாதை, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், தி.மு.க.,விடம், தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதுடில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
11-ஜூன்-202121:00:09 IST Report Abuse
RajanRajan ஓ, அப்போ அந்த ஏர்போர்ட் காப்பி வாலா இனி ஆளில்லாத டீ கடையிலே டீ ஆத்துவானோ. மொத்தமா அல்வா கிண்டிட்டானுங்கப்பா. திராவிடன் காலை புடிச்ச தேறுமான்னு போயி பாரப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X