சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலனுக்கு திருமண ஏற்பாடு இளம்பெண் புகார்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்: 'காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்தி, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்' என, எஸ்.பி., அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார். தஞ்சாவூர் மாவட்டம், கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா, 24. தந்தை இறந்த நிலையில், தாயுடன் வசித்து வருகிறார். பி.இ., முடித்து, சென்னையில ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவரும், பாபநாசம் அடுத்த எருமைப்பட்டியைச் சேர்ந்த
 காதலனுக்கு திருமண ஏற்பாடு இளம்பெண் புகார்

தஞ்சாவூர்: 'காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்தி, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்' என, எஸ்.பி., அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா, 24. தந்தை இறந்த நிலையில், தாயுடன் வசித்து வருகிறார். பி.இ., முடித்து, சென்னையில ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவரும், பாபநாசம் அடுத்த எருமைப்பட்டியைச் சேர்ந்த விஜய்யும், 2015 முதல் கல்லுாரியில் படிக்கும் போதே, காதலித்து வந்தனர். சுகன்யா வீட்டிற்கு விஜய் அடிக்கடி சென்று, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, சுகன்யாவை திருச்சிக்கு வரவழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் விஜய் வராததால், தான் ஏமாற்றப் பட்டதை அறிந்த சுகன்யா, பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, விஜய்க்கு வேறொரு பெண்ணுடன், நாளை மறுதினம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த சுகன்யா, விஜய் வீட்டிற்கு சென்று கேட்டபோது, அவரை தகாத வார்த்தையில் திட்டி, தாக்கியுள்ளனர். இதையடுத்து சுகன்யா, 'விஜய் திருமணத்தை நிறுத்தி, என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்' என, தன் தாயுடன் சென்று நேற்று தஞ்சை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X