பொது செய்தி

தமிழ்நாடு

சவுதியில் விபத்தில் இறந்த கணவர் உடலை மீட்டு தர மனு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சிவகங்கை : சவுதி அரேபியா, ரியாத்தில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த கணவர்உடலைகேட்டு, மீட்டு தரக்கோரி அவரது மனைவி சவுந்திரம் 25, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். மானாமதுரை அருகே ஆலங்குளம் ராஜேஸ்வரன் 35. இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகர் தனியார் நிறுவனத்தில் 2018 ஜூன் 31 முதல் பணியாற்றினார். ஜூன் 2 ம் தேதி ஏற்பட்ட ரோடு விபத்தில் உயிரிழந்தார். கணவர் இறந்த

சிவகங்கை : சவுதி அரேபியா, ரியாத்தில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த கணவர்உடலைகேட்டு, மீட்டு தரக்கோரி அவரது மனைவி சவுந்திரம் 25, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மானாமதுரை அருகே ஆலங்குளம் ராஜேஸ்வரன் 35. இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகர் தனியார் நிறுவனத்தில் 2018 ஜூன் 31 முதல் பணியாற்றினார். ஜூன் 2 ம் தேதி ஏற்பட்ட ரோடு விபத்தில் உயிரிழந்தார். கணவர் இறந்த விபரத்தை நிறுவனம், அவரது மனைவிக்கு தெரிவிக்கவில்லை. இதையடுத்து தனது குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த பெண், கணவர் உடலை மீட்டுத்தரக்கோரி மனு செய்தார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வுக்கு சென்றதால், அவரது நேர்முக உதவியாளர் ரத்தினவேலிடம் மனுவை அளித்தனர். அவர் அந்நாட்டு துாதரகத்தில் பேசி, உடலை மீட்டு தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X