சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து கடவுள் அவமதிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் கருப்பசாமி வேடமிட்டவர், டாக்டர், போலீஸ், துப்புரவு பணியாளர் காலில் விழுந்து வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், கொரோனா விழிப்புணர்விற்காக, 'கொரோனாவை விரட்ட குறி சொல்லும் நவீன கருப்பசாமி' என்ற கலை நிகழ்ச்சி நடந்தது.இதில், கருப்பசாமி

ராமநாதபுரம்:கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் கருப்பசாமி வேடமிட்டவர், டாக்டர், போலீஸ், துப்புரவு பணியாளர் காலில் விழுந்து வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், கொரோனா விழிப்புணர்விற்காக, 'கொரோனாவை விரட்ட குறி சொல்லும் நவீன கருப்பசாமி' என்ற கலை நிகழ்ச்சி நடந்தது.இதில், கருப்பசாமி வேடமிட்டு, வீச்சரிவாள், தீப்பந்தத்துடன் சாமி ஆடியவர், டாக்டர், போலீஸ் வேடமிட்டவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார்.

மேலும், 'கொரோனாவை விரட்ட என்னால் முடியாது. என்னைவிட நீங்கள் தான் பெரியவர்கள்; வாழும் கடவுள்' என்றார்.பொதுமக்களை பார்த்து, 'கோவிலுக்கு போகும் முட்டாள்களே... கொரோனாவை கட்டுப்படுத்த முக கவசம் அணியுங்கள்,' எனக் கூறி, முக கவசம் அணிந்தார். ஹிந்து கடவுளான கருப்பசாமி வேடமணிந்து சாமி ஆடியவரின் இந்த செயல், கடவுள்களை இழிவுபடுத்துவது போல் அமைந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி., கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், சமூக இடைவெளியின்றி, 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

ஹிந்து முன்னணி பொதுச் செயலர் ராமமூர்த்தி கூறுகையில், ''கொரோனா விழிப்புணர்வு தேவை தான். ஆனால், ஒரு மதத்தை இழிவுபடுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது. இது தொடர்ந்தால் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X