பொது செய்தி

தமிழ்நாடு

முடங்கிய செட்டிநாடு சுற்றுலா தலங்கள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடை ஊரடங்கால் சுற்றுலா தொழில் முற்றிலுமாக முடங்கியது.ஆன்மிக தலங்கள், புராதன கட்டடங்கள், கலைப் பொருட்கள், உணவு சார்ந்து சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் நடக்கிறது. செட்டிநாடு புராதான கட்டடங்களை வெளிநாடுகளிலிருந்து ஆண்டுக்கு 10 ஆயிரம் பயணிகள் வந்து ரசிக்கின்றனர். நவ., டிச., மற்றும் பிப்., மார்ச் மாதங்களில்

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடை ஊரடங்கால் சுற்றுலா தொழில் முற்றிலுமாக முடங்கியது.

ஆன்மிக தலங்கள், புராதன கட்டடங்கள், கலைப் பொருட்கள், உணவு சார்ந்து சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் நடக்கிறது. செட்டிநாடு புராதான கட்டடங்களை வெளிநாடுகளிலிருந்து ஆண்டுக்கு 10 ஆயிரம் பயணிகள் வந்து ரசிக்கின்றனர். நவ., டிச., மற்றும் பிப்., மார்ச் மாதங்களில் வெளிநாட்டினர் வருவது வழக்கம்.

வெளிநாடு விமானங்கள் ரத்தானதால் புராதன, கைவினை பொருட்கள், காட்டன் சேலை, உணவு விற்பனை சரிந்துள்ளது. பாரம்பரிய உணவகங்களும் பாதித்துள்ளன. ஆன்மிக சுற்றுலாவாக ஆண்டுக்கு ஒரு லட்சம் வருவர். உள்ளூர் பயணிகளும் இல்லாததால் கோயில் நகரங்களில் உணவு, தங்குமிடம். உள்ளுர் வாகன போக்குவரத்தும் வெகுவாக பாதித்துள்ளது.

இது குறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, ஊரடங்கு முடிந்த பின் சமூக விலகலுடன் கூடிய சுற்றுலா திட்டங்களை நடத்தவும், போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலாவாசிகளை கவர கூடுதல் பாரம்பரிய கலை, விழாக்கள் நடத்தவும், சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தினமும் ராமேஸ்வரத்திற்கு வரும் 50 ஆயிரம் ஆன்மிக சுற்றுலா பயணிகள், மதுரைக்கு ஆன்மிக சுற்றுலா வரும் பயணிகளின்றி சிவகங்கை சுற்றுலா தொழில் பாதித்து உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X