பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் விளைச்சல் இருமடங்கு அதிகரிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் தேங்காய் விளைச்சல் இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில் கூலி ஆட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.திருப்புவனம் வட்டா ரத்தில் செல்லப்பனேந்தல், வில்லியரேந்தல், பிரம னூர், கீழடி, அகரம், மடப் புரம், கானூரில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இம்மரத்தில் 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டு நடைபெறும். ஒரு மரத்திற்கு

திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் தேங்காய் விளைச்சல் இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில் கூலி ஆட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

திருப்புவனம் வட்டா ரத்தில் செல்லப்பனேந்தல், வில்லியரேந்தல், பிரம னூர், கீழடி, அகரம், மடப் புரம், கானூரில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இம்மரத்தில் 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டு நடைபெறும். ஒரு மரத்திற்கு கடந்தாண்டு வறட்சி காரணமாக 10 முதல் 15 தேங்காய்களே கிடைத்து வந்தன. கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவ மழை மற்றும் வைகை ஆற்றில் நீர் வரத்து காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளன.

தற்போது ஒரு மரத்திற்கு 30 முதல் 40 தேங்காய்கள் கிடைக்கின்றன. வரத்து அதிகரித்த நிலையில், அவற்றை இறக்க போதிய கூலி ஆட்கள் இல்லை. மதுரை மாவட்டம், சோழவந்தான், பேரை யூரில் இருந்துதான் தேங் காய் வெட்ட அதிகளவு ஆட்கள் வருகின்றனர். மரத்திற்கு தேங்காய் வெட்ட 17 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.குழுக்களாக வரும் இவர்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விளைந்த காய்களை அறுவடை செய்ய முடியவில்லை என விவசாயிகள் புலம்பி தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X