இந்தியா

மது கடைகள் மூடல் என வதந்தி புதுச்சேரியில் 'குடி'மகன்கள் பீதி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மீண்டும் மூட உள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலால் துறை சார்பில், சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூடப்பட்ட மதுக் கடைகள், 8ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.'அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து,

புதுச்சேரி:புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மீண்டும் மூட உள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலால் துறை சார்பில், சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூடப்பட்ட மதுக் கடைகள், 8ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.'அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து, புதுச்சேரிக்கு மதுப் பிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது.

'இதனால், நாளை ஒரு நாள் மட்டுமே மதுபானக் கடைகள் இயங்கும். நாளை மறுதினம் முதல், கடைகள் மீண்டும் மூடப்பட உள்ளது' என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், மதுபானக் கடைகளில் நேற்று திடீரென கூட்டம் அதிகரித்தது.இது குறித்து, கலால் உதவி ஆணையர் சுதாகரிடம் கேட்டபோது, ''சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுகிறது. அதை நம்ப வேண்டாம். மதுபானக் கடைகளை மூட, கலால் துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை,'' என்றார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி, பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கலால் துறை தாசில்தார் பாலகிருஷ்ணன், போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X