பொது செய்தி

தமிழ்நாடு

விதைக்கடலை விலையேற்றம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் விதைக்கடலை விலையேற்றத்தால் விவசாயிகள் கடலை சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.மாவட்டத்திலேயே இத்தாலுகாவில் தான் அதிக பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விதைக்கடலையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மானாவாரி விவசாயிகள் கடலை சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.கிணறு, போர்வெல் உள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் வசதியுடன் வீரியரக

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் விதைக்கடலை விலையேற்றத்தால் விவசாயிகள் கடலை சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.

மாவட்டத்திலேயே இத்தாலுகாவில் தான் அதிக பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விதைக்கடலையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மானாவாரி விவசாயிகள் கடலை சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.கிணறு, போர்வெல் உள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் வசதியுடன் வீரியரக விதைகளை வேளாண்மைத் துறையினர் வழங்கி வருகின்றனர். ஆனால் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யக்கூடிய கே 6 போன்ற நாட்டுரக விதைகள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஒரு படி விதை 80 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அறுவடை நேரங்களில் விவசாயிகளிடம் விதை கடலைகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் அதே வியாபாரிகள் சாகுபடி நேரத்தில் அதிக விலை வைத்து விற்கின்றனர். இதனால் பல விவசாயிகள் விதைகளை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

அப்படியே வாங்கி பயிரிட்டாலும் உழவுக்கூலியும், அறுவடைக் கூலியும் அதிகம் என்பதால் பெரும்பாலும் நஷ்டமே ஏற்படுகிறது. எனவே சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய கே 6 போன்ற விதைக்கடலையை வேளாண் துறையினர் குறைந்த விலைக்கு வழங்குவதுடன், அனைத்து மானாவாரி நிலங்களையும் இலவசமாக கோடை உழவு செய்து நிலத்தை பண்படுத்தி தர விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X