சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறையில் கைதி கொலை அதிகாரிகள் இடமாற்றம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி, பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதி முத்து மனோ, 27, என்பவர், ஏப்ரல் 22ல் சக கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டார்.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பிணவறையில், அவரது உடல் உள்ளது. 50 நாட்கள் ஆகியும், உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்து

திருநெல்வேலி:பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி, பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதி முத்து மனோ, 27, என்பவர், ஏப்ரல் 22ல் சக கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பிணவறையில், அவரது உடல் உள்ளது. 50 நாட்கள் ஆகியும், உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். 'உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்; 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர். கொலை குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். கைதி கொலைக்கு பின், ஜெயிலர் சண்முகசுந்தரம் உட்பட, ஏழு அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

தற்போது, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டு உள்ளார். புதிய கண்காணிப்பாளராக, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் சங்கர் மாற்றப்பட்டுள்ளார்.ஜெயிலர் பரசுராமன், மதுரை சிறைக்கும், மதுரை ஜெயிலர் வசந்த கண்ணன், திருநெல்வேலிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X