பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தோறும் பரிசோதனை 427 பேருக்கு அறிகுறி: சுகாதார துணை இயக்குனர் தகவல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சிவகங்கை: ''மாவட்டத்தில் 1.99 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தியதில், 427 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறிந்துள்ளோம்,'' என சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. ஆரம்பத்திலேயே தொற்றினை கண்டறிந்து சிகிச்சை அளித்தால், இறப்பை குறைக்கலாம். இதற்காக 445 கிராம ஊராட்சிகளில் மகளிர் குழுவினர் மூலம்

சிவகங்கை: ''மாவட்டத்தில் 1.99 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தியதில், 427 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறிந்துள்ளோம்,'' என சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. ஆரம்பத்திலேயே தொற்றினை கண்டறிந்து சிகிச்சை அளித்தால், இறப்பை குறைக்கலாம். இதற்காக 445 கிராம ஊராட்சிகளில் மகளிர் குழுவினர் மூலம் வீடுகள் தோறும் சென்று கணக்கெடுப்பு நடத்தி, காய்ச்சல், சளி, மூச்சுதிணறல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம்.

அந்தவகையில் மாவட்ட அளவில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 534 வீடுகளில் பரிசோதனை செய்ததில், 427 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறிந்து, சிகிச்சை அளித்துள்ளோம். வீடு தேடி வரும் மகளிர் குழுவினருக்கு கொரோனா சார்ந்த அறிகுறிகளை தயக்கமின்றி தெரிவித்து சிகிச்சை பெறலாம். சிவகங்கை அருகே கண்டுபட்டியில் மருத்துவ குழுவினர் மூலம் 154 வீடுகளில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X