சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உப்பனாறு வடிகாலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை:சீர்காழி அருகே, கூப்பிடுவான் உப்பனாறு வடிகாலை சரிவர துார்வார வில்லை என குற்றம் சாட்டி, அப்பகுதி விவசாயிகள் வடிகாலில் இறங்கி, ஆர்ப்பாட்டம் செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்று வடிகால் உள்ளது. இவ்வடிகால் மூலம், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த வடிகாலில், 30 கி.மீ.,
 உப்பனாறு வடிகாலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை:சீர்காழி அருகே, கூப்பிடுவான் உப்பனாறு வடிகாலை சரிவர துார்வார வில்லை என குற்றம் சாட்டி, அப்பகுதி விவசாயிகள் வடிகாலில் இறங்கி, ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்று வடிகால் உள்ளது. இவ்வடிகால் மூலம், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த வடிகாலில், 30 கி.மீ., துாரத்திற்கு, 78.80 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சரிவர துார்வாரவில்லை எனக் கூறி, அப்பகுதி விவசாயிகள், நேற்று உப்பனாற்று வடிகாலில் இறங்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் கூறுகையில், 'இந்த உப்பனாற்றை சரிவர துார்வாரவில்லை என்றால், 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், மழை வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படும். 'துார்வாரும் மண்ணை கொட்டி கரையை பலப்படுத்தி, மரம், செடி, கொடிகளை முழுமையாக அகற்ற வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X