பொது செய்தி

தமிழ்நாடு

செயற்கை விலை உயர்வால் கட்டுமானத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்புத்துார்: செயற்கையான கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கட்டட பொறியாளர் சங்க கூட்டமைப்பின் மாநில மக்கள் தொடர்பு அலுவலர் குழந்தைவேலு தெரிவித்தார்.அவர் கூறியதாவது,கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனாவால் அனைத்து தொழில்களும் முடங்கின. இந்நிலையில்தற்போது கட்டுமான பொருட்களின்

திருப்புத்துார்: செயற்கையான கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கட்டட பொறியாளர் சங்க கூட்டமைப்பின் மாநில மக்கள் தொடர்பு அலுவலர் குழந்தைவேலு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனாவால் அனைத்து தொழில்களும் முடங்கின. இந்நிலையில்தற்போது கட்டுமான பொருட்களின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ரூ.340க்கு விற்ற சிமின்ட் மூடை ரூ.500க்கும், இரும்பு கம்பி டன் ரூ.50 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரத்திற்கும், மூவாயிரம் செங்கல் லோடு ரூ.24 ல் இருந்து 30 ஆயிரம், எம்.சாண்ட் 4,500 ஆக உயர்ந்துள்ளன. ஜல்லி, மணல், பெயிண்ட் விலை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

இது செயற்கையான விலை ஏற்றம் தான். வட இந்திய தொழிலாளர்கள் 15 லட்சம் பேர் ஊருக்கு திரும்பியதால் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளன. இதனால் கட்டுமான பணிகளை முடிக்க முடியவில்லை. தமிழகத்தில் 15 ஆயிரம் பொறியாளர், 50 லட்சம் தொழிலாளர்கள் பாதித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து செயற்கை விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X