சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வைகை ஆற்றில் உயிரிழக்கும் சிறுவர்கள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றில் ஆபத்தான பள்ளங்கள் குறித்து பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.வைகை ஆற்றினுள் மணல் திருடியதால் ஏற்பட்ட பள்ளங்கள் தவிர நீரின் வேகத்தாலும் பள்ளங்கள் உருவாகி உள்ளன. திருப்புவனம் வைகை ஆற்றை கடக்க உயர்மட்ட மேம்பாலம் கடந்த 1995ம் ஆண்டு கட்டப்பட்டது. பழைய பாலத்தை முற்றிலும்

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றில் ஆபத்தான பள்ளங்கள் குறித்து பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வைகை ஆற்றினுள் மணல் திருடியதால் ஏற்பட்ட பள்ளங்கள் தவிர நீரின் வேகத்தாலும் பள்ளங்கள் உருவாகி உள்ளன. திருப்புவனம் வைகை ஆற்றை கடக்க உயர்மட்ட மேம்பாலம் கடந்த 1995ம் ஆண்டு கட்டப்பட்டது. பழைய பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். பல ஆண்டு களாக தண்ணீர் வந்த வேகத்தில் ஒரு புறம் மட்டும் மெகா சைஸ் பள்ளம் உருவாகி உள்ளது. நாளுக்கு நாள் இப்பள்ளம் 30 அடி வரை ஆழமாக மாறியது. இதன் விபரீதம் புரியாமல் பலரும் குளிப்பது, மீன் பிடித்து வருகின்றனர். போலீசார் பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளவில்லை.

தற்போது பள்ளிகள் செயல்படாததால் சிறுவர்கள் பலரும் இப்பள்ளத்தில் இறங்கி குளிக்கின்றனர். ஆபத்தை உணராமல் இடிந்த பாலத்தின் மேலிருந்து குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். போதிய அனுபவம் இல்லாததால் குதிக்கும் போது ஆழமான பகுதிகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். பொதுப்பணித்துறையினர் சேதமடைந்த பாலத்தை முற்றிலும் அகற்றி, அங்கு யாரும் குளிக்க, மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X