பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விவசாயிகளுக்கு அழைப்புஸ்ரீவில்லிபுத்துார்: வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி செய்திக்குறிப்பு: சிறு, குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீத மானியம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகி பயனடையலாம் என, கேட்டுள்ளார்.நில எடுப்பு ஆய்வுக்

விவசாயிகளுக்கு அழைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி செய்திக்குறிப்பு: சிறு, குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீத மானியம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகி பயனடையலாம் என, கேட்டுள்ளார்.

நில எடுப்பு ஆய்வுக் கூட்டம்

விருதுநகர்: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நில எடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமை வகித்தனர்.கலெக்டர் கண்ணன், எம்.பி.,தனுஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன் முன்னிலை வகித்தனர். ரயில்வே மேம்பாலம், சிப்காட் திட்டங்களுக்கு தேவையான நில எடுப்பு தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.

அமைச்சர்கள் உதவி

விருதுநகர்: கலெக்டர் அலுவலகத்தில் சமுக நலன், மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கைகளுக்கு முதற்கட்ட கொரோனா நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். எம்.பி.,தனுஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு 235 திருநங்கைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4.70 லட்சம் மதிப்பில் கொரோனா நிதியுதவி தொகையை வழங்கினர்.

கடைகளுக்கு சீல்

ராஜபாளையம்: ஊரடங்கு தளர்வின் பேரில் பலசரக்கு கடைகள், பழக்கடைகள் செயல்பட்ட நிலையில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 5 ஜவுளிக்கடை, 3 சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 30 பல்வேறு வகை கடைகளுக்கு தாசில்தார் ராமச்சந்திரன் சீல் வைத்ததுடன், அபராதமும் விதித்தார்.

ஆலையில் எம்.பி., ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என காங்., எம்.பி.,மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார்.காங்., எம்.எல்.ஏ., அசோகன், நிர்வாகிகள் ராஜாசொக்கர், ரெங்கசாமி, மீனாட்சி சுந்தரம், மீனாட்சி சுந்தரம், சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

ராஜபாளையம்: மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரன பொருட்களை போலீசார் சார்பில் டி.எஸ்.பி., நாகசங்கர் வழங்கினார். வடக்கு இன்ஸ்பெக்டர் தெய்வம் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X