சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஜாலி டூர்' செல்ல 'இ - பாஸ்' 90 சதவீத விண்ணப்பம் நிராகரிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில் சுற்றுலா நோக்கத்துடன் பலர், 'இ- - பாஸ்' கேட்டு விண்ணப்பிப்பதால், 90 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.தொற்று அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நேரம் வீண்நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி மற்றும் குற்றாலம்
 'ஜாலி டூர்' செல்ல 'இ - பாஸ்'  90 சதவீத விண்ணப்பம் நிராகரிப்பு

ஊட்டி:நீலகிரியில் சுற்றுலா நோக்கத்துடன் பலர், 'இ- - பாஸ்' கேட்டு விண்ணப்பிப்பதால், 90 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

தொற்று அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நேரம் வீண்நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க, தொடர்புடைய மாவட்ட கலெக்டரிடம், 'இ - -பாஸ்' பெற்று பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த இணையதளத்தில், மருத்துவம், துக்க நிகழ்வுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வசதி உள்ளது. ஆனால், பெரும்பாலான பதிவுகள் முறையான ஆவணங்கள் இன்றி வருவதால், அவற்றை பரிசீலிப்பதில் நேரம் வீணாகி வருவதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகமது குதிரதுல்லா கூறுகையில், ''நீலகிரிக்கு வர, இ - -பாஸ் கட்டாயம். 'இ - -பாஸ்'சுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிடும் மருத்துவ தேவைக் கான இடமோ, மருத்துவமனையோ இந்த மாவட்டத்தில் இல்லை.''அனுமதி கிடைத்தால், சுற்றுலா போகலாம் என்ற அடிப்படையில், முறையான ஆவணமின்றி விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை 90 சதவீத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன,'' என்றார்.


பஸ் பறிமுதல்



ஊரடங்கு கட்டுப்பாடுகளால், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், எண்ணெய் ஆலைகள், நுால் மில்கள் இயக்கப்படாமல் உள்ளன.இவற்றில் பணியாற்றிய வட மாநிலத்தினர் பலர், சொந்த ஊர் சென்று விட்டனர்.அரசு தடையை மீறி, சில நிறுவனங்கள் ரகசியமாக இயங்கி வருகின்றன; அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை இரு தனியார் பஸ்களில், வட மாநில தொழிலாளர்கள் காங்கேயம் அழைத்து வரப்படுவதாக தகவல் கிடைத்தது. வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்தனர்.பீஹாரில் இருந்து எண்ணெய் ஆலைக்கு, 67 பேருடன் ஒரு பஸ்சும், அசாமில் இருந்து தேங்காய் உலர் களத்துக்கு, 47 பேருடன் மற்றொரு பஸ்சும் வந்தது. தாசில்தார் சிவகாமி தலைமையிலான அதிகாரிகள், இந்த பஸ்களை பறிமுதல் செய்தனர். தொழிலாளர்கள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X