தெருவின் நடுவில் மின்கம்பம்: சிரமத்தில் சென்னல்குடி மக்கள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை: தெருவின் நடுவில் மின்கம்பம், பயமுறுத்தும் மயான ரோடு, சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம் என அருப்புக்கோட்டை சென்னல்குடி ஊராட்சி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.10க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ள இங்கு மயானத்திற்கு செல்லும் ரோடு நடக்க முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து காலில் குத்துகிறது. ரோட்டின் இருபுறமும் உள்ள சாக்கடை கழிவு நீர் ரோட்டில் தேங்கி

அருப்புக்கோட்டை: தெருவின் நடுவில் மின்கம்பம், பயமுறுத்தும் மயான ரோடு, சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம் என அருப்புக்கோட்டை சென்னல்குடி ஊராட்சி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

10க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ள இங்கு மயானத்திற்கு செல்லும் ரோடு நடக்க முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து காலில் குத்துகிறது. ரோட்டின் இருபுறமும் உள்ள சாக்கடை கழிவு நீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. பலஆண்டுகளாக இதே நிலை உள்ளது.இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதில் சிரமமாக உள்ளது. மழை காலத்தில் சகதியாகிறது. தெருக்களில் ஊரில் உள்ள பெரிய, சிறிய கண்மாய்களுக்கு மழை நீர் வரும் வரத்து கால்வாய்கள் சேதமடைந்து உள்ளன.

ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும்.பாலவநத்தம் மேம்பாலம் அருகில் தடுப்பணை கட்டினால் மழை நீர் வீணாகாது கண்மாய்களில் தண்ணீர் சேகரம் ஆகும். அரசு இதற்கு முனைப்பு காட்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X