சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: வாலிபர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தர்மபுரி:சிறுவனை கடத்தி சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறுவனை மீட்டனர்.தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜசேகர், 32. இவரது மகன் ஹரீஸ், 7. நேற்று முன்தினம், வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஹரீஸ் திடீரென மாயமானார்.தர்மபுரி டவுன் போலீசார், அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். இதில், ராஜசேகருக்கு அறிமுகமான, கோவையைச்
 கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: வாலிபர் கைது

தர்மபுரி:சிறுவனை கடத்தி சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறுவனை மீட்டனர்.

தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜசேகர், 32. இவரது மகன் ஹரீஸ், 7. நேற்று முன்தினம், வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஹரீஸ் திடீரென மாயமானார்.தர்மபுரி டவுன் போலீசார், அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். இதில், ராஜசேகருக்கு அறிமுகமான, கோவையைச் சேர்ந்த சரவணகுமார், 32, என்பவர் சிறுவனை காரில் கடத்திச் சென்றது தெரிந்தது.

அவரின் மொபைல் எண்ணை, 'டிராக்' செய்து, நேற்று காலை கோவையில் சரவணகுமாரை பிடித்த போலீசார், சிறுவனை மீட்டனர். சரவணகுமாரும், ராஜசேகரும் சமூக வலைதளம் மூலம் பழகியுள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன், தனக்கு பழைய கார் வாங்கி தரும்படி, ராஜசேகரிடம் 80 ஆயிரம் ரூபாயை சரவணகுமார் கொடுத்துள்ளார். ராஜசேகர் கார் வாங்கி தராமல், பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார். ஆத்திரம் அடைந்த சரவணகுமார், பணத்தை ராஜசேகரிடம் இருந்து மிரட்டி வாங்க, சிறுவனை கடத்தியது தெரிந்தது. சரவணகுமாரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X