சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மாயமானது சமூக இடைவெளி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் செயலை கண்டு, பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்தார்.நேற்று கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.உடன் துணை

திருவண்ணாமலை:சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் செயலை கண்டு, பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்தார்.நேற்று கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.உடன் துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் சந்தீப் நந்துாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருநங்கையர், 332 பேருக்கு கொரோனா நிவாரணம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், அரசு அதிகாரிகள், பயனாளிகள், என கும்பலாக நிற்க வைத்து வழங்கியது, அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முன்னதாக அமைச்சர்வேலு வெளியிட்ட அறிக்கையில், 'அரசுப் பணிகள் குறித்து, இரண்டு தினங்கள் ஆய்வு செய்ய உள்ளதால், கட்சியினர் யாரும் என்னை சந்திக்கக் கூடாது. ஊரடங்கை நாமே மீறக்கூடாது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X