திண்டாட்டம்! தரமற்ற குழாய்களால் வீணாகும் குடிநீர்; உடைப்பை சரி செய்யாது பற்றாக்குறை| Dinamalar

தமிழ்நாடு

திண்டாட்டம்! தரமற்ற குழாய்களால் வீணாகும் குடிநீர்; உடைப்பை சரி செய்யாது பற்றாக்குறை

Added : ஜூன் 11, 2021
Share
சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடுகின்றனர்.மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக பல நுாறு கி.மீ., துாரம் குழாய்கள் பதிக்கப்படுகிறது. இக்குழாய்கள் தரமற்றவையாக உள்ளதோடு, அதிக

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடுகின்றனர்.

மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக பல நுாறு கி.மீ., துாரம் குழாய்கள் பதிக்கப்படுகிறது. இக்குழாய்கள் தரமற்றவையாக உள்ளதோடு, அதிக ஆழத்திலும் பதிக்கப்படுவதில்லை. மேலோட்டமாக பதிப்பதால் சிறிய வாகனங்கள் சென்றால் கூட குழாய்கள் உடைகிறது.

குடிநீரும் வெளியேறி ரோட்டில் வீணாகிறது. இதை உடனடியாக சரி செய்வதில்லை. தற்போது கோடை முடிந்தும் வெயில் கொளுத்துவதால் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சாதாரணமாக 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை ஆகிறது.

இதிலும் குழாய்கள் உடைப்பால் இதுவும் முழுமையாக கிடைப்பதில்லை. குழாய்கள் உடைப்பு ஏற்பட்ட உடன் அதை சீரமைக்க உள்ளாட்சி அமைப்புகள் முன் வர வேண்டும்.

வழி காணுங்க:

குடிநீருக்காக பதிக்கப்படும் குழாய்கள் தரமானதாக இல்லாததால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. உடைந்த குழாய்களையும் உடனடியாகவும் சரி செய்யாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.இதை சீராக்க மாவட்ட நிர்வாகம் வழி காண வேண்டும்.பொன்னுசெல்வம், தனியார் ஊழியர், திருத்தங்கல்................

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X