பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகர் கலெக்டர் அலுவலகம், சாத்துாரில் நான்குவழிச்சாலையில் விரைவில் மேம்பாலம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விருதுநகர் : ''விருதுநகர் கலெக்டர் அலுவலகம், சாத்துார் நான்குவழிச்சாலையில் விரைவில் மேம்பாலம் பணி துவங்கும் ,'' என ,அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறினார்.விருதுநகரில் அவர் கூறியதாவது: அருப்புக்கோட்டை ரிங்க் ரோடு பணிக்காக நிலுவையில் உள்ள நில எடுப்பு பணிகளை இரு மாதத்திற்குள் முடிக்க தேவையான உதவிகளை அரசு செய்யும். பட்டம்புதுாரில் சிப்காட் அமைப்பதற்காக 1500

விருதுநகர் : ''விருதுநகர் கலெக்டர் அலுவலகம், சாத்துார் நான்குவழிச்சாலையில் விரைவில் மேம்பாலம் பணி துவங்கும் ,'' என ,அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது: அருப்புக்கோட்டை ரிங்க் ரோடு பணிக்காக நிலுவையில் உள்ள நில எடுப்பு பணிகளை இரு மாதத்திற்குள் முடிக்க தேவையான உதவிகளை அரசு செய்யும். பட்டம்புதுாரில் சிப்காட் அமைப்பதற்காக 1500 ஏக்கர் நில எடுப்பு பணிகளை டிசம்பருக்குள் முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். இருக்கன்குடி, சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில் மேம்பாலங்களுக்கு தேவையான நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும், ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் பணியை வேகப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளோம்.

திருமங்கலம் டூ ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான நில எடுப்பு பணி, விருதுநகர் கலெக்டர் அலுவலகம், சாத்துார் படந்தால் நான்குவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் விரைவில் துவங்கப்படும். மதுரை டூ துாத்துக்குடி சிறப்பு சாலை பணிகள் துவங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் தகுதியானவர்ளுக்கு நலத்திட்டங்களை வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X