கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கல்லணை கால்வாய் புனரமைப்பு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை:கல்லணை கால்வாயில் 'கான்கிரீட்' தளம் அமைக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி பிப்., 2ல் துவங்கியது. இத்திட்டம் மூலம் கல்லணை கிளை கால்வாய், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 403 ஏரிகள், 2

மதுரை:கல்லணை கால்வாயில் 'கான்கிரீட்' தளம் அமைக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி பிப்., 2ல் துவங்கியது. இத்திட்டம் மூலம் கல்லணை கிளை கால்வாய், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 403 ஏரிகள், 2 லட்சத்து, 27 ஆயிரத்து, 472 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும் என அறிவிக்கப்பட்டது.

டெல்டா விவசாயிகளின் கருத்துகளை கோராமல், கொரோனா தொற்று காலத்தில் அவசரமாக பணி நடக்கிறது. கால்வாய் தரை தளத்தை கான்கிரீட் கலவை மூலம் மூடுகின்றனர்.இதனால், நிலத்தடி நீர் சேமிப்பு தடுக்கப்படும். அருகில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு விடும். கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். கால்வாய் பகுதியில் ஆமை, தவளை, மயில்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கும்.

கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி 20 சதவீதம் முடிந்துள்ளது. அவற்றில் கான்கிரீட் தளத்தை அகற்ற வேண்டும். மீதமுள்ள பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர், தஞ்சாவூர், புதுக்கோட்டை கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூலை 5க்கு ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X