சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் பதுக்கிய ரூ.40 லட்சம் பறிமுதல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரியில், 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பொள்ளாச்சி ரோடு பெஸ்ட் நகரில்,போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். கர்நாடக மாநில பதிவு எண் லாரி, ரோட்டோரம் நின்று கொண்டிருந்தது.லாரி டிரைவர் ராகவன், 54, கரூரில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றி, கேரள மாநிலம் கோழிக்கோடு செல்வதாக கூறினார். லாரியை
 லாரியில் பதுக்கிய  ரூ.40 லட்சம் பறிமுதல்

திருப்பூர்:சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரியில், 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பொள்ளாச்சி ரோடு பெஸ்ட் நகரில்,போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். கர்நாடக மாநில பதிவு எண் லாரி, ரோட்டோரம் நின்று கொண்டிருந்தது.லாரி டிரைவர் ராகவன், 54, கரூரில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றி, கேரள மாநிலம் கோழிக்கோடு செல்வதாக கூறினார். லாரியை சோதனையிட்டதில், டிரைவர் கேபினில் இரண்டு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது.

அரிசி மூட்டை அருகே இருந்த சில பெட்டிகளை போலீசார் திறந்து பார்த்தபோது, கட்டுக் கட்டாக, 40 லட்சம் ரூபாய் இருந்தது.போலீசார் கூறியதாவது:கரூரைச் சேர்ந்த அன்சார் என்பவர், இந்த பெட்டிகளை தன்னிடம் வழங்கியதாகவும், இதில் பணம் இருப்பது தனக்கு தெரியாது; செல்லும் வழியில், மலப்புரத்தில் உள்ள தன் தந்தை அன்வரிடம் ஒப்படைக்குமாறு அன்சார் கூறியதாக, டிரைவர் ராகவன் தெரிவித்தார்.

அன்வரிடம் போனில் விசாரித்தபோது, 'மகள் திருமணத்துக்காக கொண்டு வரப்பட்ட பணம்' என கூறினார். உரிய ஆவணத்தை காட்டி, பணத்தை பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணம், வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்படும். இது, 'ஹவாலா' பணமா எனவும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X