சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டயர் வெடித்து இன்ஸ்பெக்டர் பலி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 56; சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியனில், இன்ஸ்பெக்டர். இவரது தாயார், ஊரில் இறந்துவிட்டார்.தாயாரின் இறப்பு காரியங்களை முடித்து, நேற்று காலை, 'மாருதி சுசூகி' காரில்
 கார் டயர் வெடித்து  இன்ஸ்பெக்டர் பலி

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 56; சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியனில், இன்ஸ்பெக்டர். இவரது தாயார், ஊரில் இறந்துவிட்டார்.தாயாரின் இறப்பு காரியங்களை முடித்து, நேற்று காலை, 'மாருதி சுசூகி' காரில் சென்னை புறப்பட்டார். அவரே காரை ஓட்டினார்.

மதியம் 2:45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, எறஞ்சி அருகே மேம்பாலத்தில் வந்தபோது, காரின் முன்பக்க வலது டயர் வெடித்தது.இதனால் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் உருண்ட கார், முன்னால் சென்ற 'பைக்' மீது மோதியது.

இதில் ராமகிருஷ்ணன், பைக்கில் சென்ற, 30 - 35 வயதுடைய இருவர் படுகாயம் அடைந்தனர். போலீசார், மூவரையும் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்து, ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X