சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளுக்கு கட்டாய திருமணம் தாய், மாப்பிள்ளை கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பவானி:மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாயை, போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் பங்காளபுதுாரைச் சேர்ந்தவர் சித்ரா, 37; இவருக்கு, பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால், சில மாதங்களாக, சித்ரா கணவரை பிரிந்து, மகளுடன் வாழ்கிறார்.இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ், 28, என்பவருக்கு, மகளை கடந்த மாதம் கட்டாய திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

பவானி:மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாயை, போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பங்காளபுதுாரைச் சேர்ந்தவர் சித்ரா, 37; இவருக்கு, பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால், சில மாதங்களாக, சித்ரா கணவரை பிரிந்து, மகளுடன் வாழ்கிறார்.இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ், 28, என்பவருக்கு, மகளை கடந்த மாதம் கட்டாய திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியில், சிறுமியுடன் கனகராஜ் வசித்து வருகிறார். திருமணத்தில் விருப்பமில்லாத சிறுமி, தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.விசாரணை நடத்திய போலீசார், குழந்தை திருமண தடை சட்டத்தில், சித்ரா, கனகராஜ் மீது வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X