சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சானிடைசர்' குடித்த ஆட்டோ டிரைவர் பலி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:போதைக்காக, 'சானிடைசரை' குடித்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். அரியலுார் மேல அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 35; சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர், 7ம் தேதி நண்பர்களான மோகன், 37, சரவணன், 30, ஆகியோருடன் போதைக்காக சானிடைசரை குடித்தார்.இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மூவரும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இளங்கோவனுக்கு உடல்நலம்

பெரம்பலுார்:போதைக்காக, 'சானிடைசரை' குடித்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
அரியலுார் மேல அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 35; சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர், 7ம் தேதி நண்பர்களான மோகன், 37, சரவணன், 30, ஆகியோருடன் போதைக்காக சானிடைசரை குடித்தார்.இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மூவரும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இளங்கோவனுக்கு உடல்நலம் மிகவும் மோசமாகி, நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இளங்கோவன் கள்ளச்சாராயம் குடித்ததால் இறந்தார் எனவும் கூறப்படுகிறது. அரியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X