சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேட்டிலைட் போன் கட்டணம் இருமடங்கு உயர்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:சேட்டிலைட் போன் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் அவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.ஆழ்கடலில் மீன் பிடிதொழிலில் ஈடுபடும் மீனவர்களின் தகவல் தொடர்புக்காக மத்திய அரசு சேட்டிலைட் போன் வழங்கியது. புயல் போன்ற இயற்கை இடர்பாடு வரும்போது தகவல் தெரிவித்து விரைவாக கரை திரும்ப இது உதவியாக உள்ளது. இந்த போனுக்கு

நாகர்கோவில்:சேட்டிலைட் போன் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் அவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

ஆழ்கடலில் மீன் பிடிதொழிலில் ஈடுபடும் மீனவர்களின் தகவல் தொடர்புக்காக மத்திய அரசு சேட்டிலைட் போன் வழங்கியது. புயல் போன்ற இயற்கை இடர்பாடு வரும்போது தகவல் தெரிவித்து விரைவாக கரை திரும்ப இது உதவியாக உள்ளது. இந்த போனுக்கு பி.எஸ்.என்.எல். 1481 ரூபாய் மாதாந்திர கட்டணமாக வசூலித்து வந்தது. தற்போது இது மூவாயிரத்து 441 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பில் கட்ட தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா மற்றும் மீன்பிடி தடை காலத்தால் சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டண உயர்வு தங்களை மிகவும் பாதித்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் ஜூன்20ல் குளச்சல் மீன்வளத்துறை அலுவலகத்தில் அனைத்து சேட்டிலைட் போன்களையும் திரும்ப ஒப்படைக்க போவதாகவும் துாத்துார் புனித தோமையார் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X