பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் 20 லட்சம் தேங்காய் தேக்கம் ஊரடங்கு தளர்வால் வியாபாரம் துவக்கம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தேனி:ஊரடங்கால் தேனி மாவட்டத்தில் 20 லட்சம் தேங்காய் தேக்கமடைந்த நிலையில் தளர்வால் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.தேனி மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகம் உள்ளது. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு விற்பனைக்காக தேங்காய் அனுப்பப்படுகிறது. கடந்த மாத துவக்கத்தில் டன் ரூ.34 ஆயிரமாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்தான திருவிழா,

தேனி:ஊரடங்கால் தேனி மாவட்டத்தில் 20 லட்சம் தேங்காய் தேக்கமடைந்த நிலையில் தளர்வால் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகம் உள்ளது. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு விற்பனைக்காக தேங்காய் அனுப்பப்படுகிறது. கடந்த மாத துவக்கத்தில் டன் ரூ.34 ஆயிரமாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்தான திருவிழா, விசேஷங்களால் தேங்காய் பயன்பாடு குறைந்தது.

வெளியிடங்களுக்கு அனுப்ப முடியாததால் ஒரு மாதத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய் தேக்கமாகின.தற்போது ஊரடங்கு தளர்வால் தேங்காய் விற்பனை துவங்கியுள்ளது. காய்கள் உறித்து வாகனங்களில் சென்னை கோயம்பேடு, திருச்சி காந்தி மார்க்கெட் அனுப்புகின்றனர். அங்கு சிறுவியாபாரிகள் கொள்முதல் செய்வதால் மொத்தமாக பணம் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் மும்பை மார்க்கெட்டிற்கு அனுப்புகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 லட்சம் தேங்காய் டன் ரூ.29 ஆயிரம் விலைக்கு அனுப்பப்பட்டன. தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில் போலீஸ் இடையூறு இல்லாமல் இருந்தால் இன்னும் அதிக காய்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X