பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று கவனிப்பு மையங்களில் 'ஆன்லைன்' யோகா பயிற்சி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;''பொள்ளாச்சியில் உள்ள கொரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக யோகா பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என சப்-கலெக்டர் தெரிவித்தார்.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனை, பி.ஏ., கல்லுாரி கொரோனா கவனிப்பு மையம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள்

பொள்ளாச்சி;''பொள்ளாச்சியில் உள்ள கொரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக யோகா பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என சப்-கலெக்டர் தெரிவித்தார்.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனை, பி.ஏ., கல்லுாரி கொரோனா கவனிப்பு மையம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையம் மற்றும் அந்தந்த கிராமங்களிலுள்ள பள்ளிகளிலும் மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு, கவனிப்பு மையத்தில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, தங்கி இருப்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.சப் - கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:பொள்ளாச்சியில் உள்ள கொரோனா கவனிப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களின், மனநிலையை மாற்ற நாளிதழ்கள் மற்றும் கேரம் போர்டு போன்ற விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது, ஆழியாறு அறிவுத்திருக்கோவில் சார்பில், மூன்று நாட்களுக்கு 'ஆன்லைன்' வாயிலாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, பி.ஏ., கல்லுாரி கொரோனா கவனிப்பு மையத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். படிப்படியாக மற்ற மையங்களில் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X