சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடையில் ரூ.5 லட்சம் பறிப்பு இரு போலீசார் சஸ்பெண்ட்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை நகைக் கடையில் 5 லட்சம் ரூபாய் சுருட்டிய வழக்கில் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் ஆயுதப்படையில் இருப்பவர் சுஜின் 32, இரண்டாம் நிலை காவலர் முஜிப்பூர் ரகுமான் 30. இவர்கள் பூக்கடை என்.எஸ்.சி.போஸ் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நகைக் கடை ஒன்றின் ஷட்டர் கதவு பாதி திறந்திருந்தது. இதைப் பார்த்து இவர்கள்

சென்னை:சென்னை நகைக் கடையில் 5 லட்சம் ரூபாய் சுருட்டிய வழக்கில் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் ஆயுதப்படையில் இருப்பவர் சுஜின் 32, இரண்டாம் நிலை காவலர் முஜிப்பூர் ரகுமான் 30. இவர்கள் பூக்கடை என்.எஸ்.சி.போஸ் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நகைக் கடை ஒன்றின் ஷட்டர் கதவு பாதி திறந்திருந்தது. இதைப் பார்த்து இவர்கள் இருவரும் கடைக்குள் சென்றுள்ளனர்.

கடை உரிமையாளர் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார். உடனே காவலர்கள் இருவரும் 'ஊரடங்கில் இரவில் கடையைத் திறக்கலாமா' எனக் கேட்டு பணத்தை எடுத்து மீண்டும் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு வந்துள்ளனர். ஆனால் அதில் 5 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது. இதுகுறித்து பூக்கடை காவல் நிலையத்தில் உரிமையாளர் புகார் கொடுத்தார். விசாரணையில் முஜிப்பூர் ரகுமான், சுஜின் பணத்தை எடுத்தது தெரிந்தது. இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X