ராணுவத்துக்கு 5 டன் தர்பூசணி: விவசாயி ஆர்வம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ராம்கார்:ராணுவ வீரர்களுக்கு தன் நிலத்தில் விளைந்த 5 டன் தர்பூசணி பழங்களை இலவசமாக வழங்க விவசாயி முன்வந்தார். ஆனால் அவரது ஏழ்மை நிலை கருதி ராணுவ வீரர்கள் தர்பூசணியை சந்தை விலைக்கு வாங்கினர்.ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார்கை சேர்ந்தவர் ரஞ்சன் குமார் மகதோ. பட்டதாரியான இவர் விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டு 25 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கினார். ஆண்டுதோறும் ஏக்கருக்கு தலா 5000

ராம்கார்:ராணுவ வீரர்களுக்கு தன் நிலத்தில் விளைந்த 5 டன் தர்பூசணி பழங்களை இலவசமாக வழங்க விவசாயி முன்வந்தார். ஆனால் அவரது ஏழ்மை நிலை கருதி ராணுவ வீரர்கள் தர்பூசணியை சந்தை விலைக்கு வாங்கினர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார்கை சேர்ந்தவர் ரஞ்சன் குமார் மகதோ. பட்டதாரியான இவர் விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டு 25 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கினார். ஆண்டுதோறும் ஏக்கருக்கு தலா 5000 ரூபாய் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.இதில் 6 ஏக்கரில் 15 லட்ச ரூபாய் முதலீட்டில் தர்பூசணி பயிரிட்டார். இதில் 120 டன்னுக்கு மேல் தர்பூசணி காய்த்தது. ஆனால் தர்பூசணிகளை வாங்க ஜார்க்கண்ட் மக்கள் அதிக விருப்பம் காட்டாததால் அறுவடை செய்யாமல் செடியிலேயே தர்பூசணிகள் பழுத்து தொங்குகின்றன.

கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பதாக மகதோ அறிவித்தும் யாரும் வாங்கவில்லை. இதையடுத்து ராம்கார்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு 5 டன் தர்பூசணிகளை இலவசமாக வழங்க முடிவு செய்தார்.மகதோவின் வயலுக்கு வந்த ராணுவ வீரர்கள் தர்பூசணிகளை சந்தை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

இது பற்றி ராணுவத்தினர் கூறுகையில் 'கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மகதோவுக்கு விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தான் இலவசமாக தருவதாக அவர் கூறியும் தர்பூசணிகளை சந்தை விலை கொடுத்து வாங்கினோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X