பொது செய்தி

தமிழ்நாடு

கைவினை பொருட்களை விற்க இலவச இணையதளம் துவக்கம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:மகளிர் சுய உதவிக்குழுவினர், சிறு, குறு தொழில் செய்பவர்கள், தங்கள் கைவினை பொருட்களை கட்டணமின்றி, 'ஆன்லைன்' வழியாக விற்பனை செய்ய, இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் தாக்கத்தில், சிறு, குறு தொழில் செய்வோர், சுயஉதவி குழுவினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கலைவண்ணமிக்க பொருள் மற்றும் குடிசை தொழில்கள் வாயிலாக உருவான பானை, மண்பாண்டங்கள் உள்ளிட்ட இதர

சென்னை:மகளிர் சுய உதவிக்குழுவினர், சிறு, குறு தொழில் செய்பவர்கள், தங்கள் கைவினை பொருட்களை கட்டணமின்றி, 'ஆன்லைன்' வழியாக விற்பனை செய்ய, இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கத்தில், சிறு, குறு தொழில் செய்வோர், சுயஉதவி குழுவினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கலைவண்ணமிக்க பொருள் மற்றும் குடிசை தொழில்கள் வாயிலாக உருவான பானை, மண்பாண்டங்கள் உள்ளிட்ட இதர விற்பனை பொருட்களை, கட்டணமின்றி விற்பனை செய்ய, தொண்டு நிறுவனம் சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தளத்தை உருவாக்கிய தொண்டு நிறுவனத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் கூறியதாவது: தங்கள் பொருட்களை விற்க முடியாமல் தவிக்கும், சிறு தொழில் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர், தாங்களாகவே, www.takecareinternational.org என்ற இணையதளத்தில் இணையலாம்.

அவரவர் உற்பத்தி செய்த பொருட்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு, விலையும் நிர்ணயம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X