பொது செய்தி

தமிழ்நாடு

தரச்சான்று விதைக்கு தட்டுப்பாடு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருச்சி:தனியார் விதைப் பண்ணைகளில் விற்பனை செய்யப்படும் விதை நெல்லை, அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டூர் அணையிலிருந்து நாளை, 12ம் தேதி, காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால், திருச்சி மாவட்டத்தில், 12 ஆயிரம் ஹெக்டரில் குறுவை நெல் சாகுபடி

திருச்சி:தனியார் விதைப் பண்ணைகளில் விற்பனை செய்யப்படும் விதை நெல்லை, அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து நாளை, 12ம் தேதி, காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால், திருச்சி மாவட்டத்தில், 12 ஆயிரம் ஹெக்டரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படும்.இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக லால்குடி, மணிகண்டம், மண்ணச்சநல்லுார், துறையூர் வட்டார விவசாயிகள், நாற்று விடும் பணியை துவங்கி உள்ளனர். குறுவை சாகுபடிக்கான நெல் விதைகள் வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் விதைப் பண்ணைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது, லால்குடி வட்டாரத்தில் வேளாண் கூட்டுறவு சங்க விதைப் பண்ணையில், விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் விதைப் பண்ணைகளில், கோ-51 என்ற நெல் ரக விதைகளை வாங்கி, விதைப்பு செய்கின்றனர்.அந்த விதை பாக்கெட்டுகளில், முளைப்பு திறன், காலாவதி தேதி போன்ற ஆய்வு சான்று முத்திரை இல்லை. 'ஊரடங்கு காரணமாக, அதிகாரிகள் ஆய்வு செய்து, சான்றளிக்க வரவில்லை',என்று தனியார் விதை பண்ணைகளில் தெரிவிக்கின்றனர்.

எனவே, தனியார் விதைப் பண்ணைகளில் விற்பனை செய்யப்படும் நெல் விதைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, சான்று வழங்க வேண்டும். அரசு விதைப் பண்ணைகளில், குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X