பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25ல் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு 2016ல் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாக். முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது.ஐந்தாண்டு ஆட்சி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25ல் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு 2016ல் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாக். முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது.ஐந்தாண்டு ஆட்சி முடிவடைந்த நிலையில் அங்கு மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக தேர்தலை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் ''அடுத்த மாதம் 25ம் தேதி 45 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடத்தப் படும்'' என தலைமை தேர்தல் கமிஷனர் அப்துல் ரஷீத் சுலேரியா அறிவித்தார்.இம்மாதம் 21 வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை காட்டிலும் தற்போது நான்கு தொகுதிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X