சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச வழக்கில் பொறியாளர் உட்பட 3 பேர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை:ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பிடிபட்ட மத்திய பொதுப்பணித்துறை பொறியாளர் உட்பட 3 பேர் மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.மதுரை பீபிகுளத்தில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு பொறியாளராக பணிபுரிந்தவர் பாஸ்கரன். இவருக்கு எதிராக சி.பி.ஐ.,க்கு புகார் வந்தது. பாஸ்கரனை சி.பி.ஐ., போலீசார் கண்காணித்தனர்.பொதுப்பணித்துறையின் பணியை

மதுரை:ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பிடிபட்ட மத்திய பொதுப்பணித்துறை பொறியாளர் உட்பட 3 பேர் மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மதுரை பீபிகுளத்தில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு பொறியாளராக பணிபுரிந்தவர் பாஸ்கரன். இவருக்கு எதிராக சி.பி.ஐ.,க்கு புகார் வந்தது. பாஸ்கரனை சி.பி.ஐ., போலீசார் கண்காணித்தனர்.பொதுப்பணித்துறையின் பணியை டெண்டர் எடுத்து நடத்தியவர் ராஜபாளையம் சிவசங்கர் ராஜா. பணிக்குரிய பில் தொகையை விடுவிக்க பாஸ்கரனிடம் கோரினார். அதற்கு அவர் லஞ்சம் கேட்டார்.

பீபிகுளத்திலுள்ள குடியிருப்பில் வசிக்கும் பாஸ்கரன் வீட்டிற்கு சிவசங்கர் ராஜா, இடைத் தரகராக செயல்பட்ட நாராயணன் சென்றனர். பாஸ்கரனிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தனர். திடீர் சோதனை செய்த சி.பி.ஐ.,போலீசார் பாஸ்கரன், சிவசங்கர்ராஜா, நாராயணனை கைது செய்தனர்.

மதுரை சி.பி.ஐ.,நீதிமன்ற நீதிபதி சிவப்பிரகாசம் முன் 3 பேரையும் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூன் 23 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X